ஆம் தோழர்களே. கடைசி ரயிலையும் தவறவிட்டவன் நான். அதன் சிகப்பு வெளிச்சப் புள்ளிகள் இன்னமும் மறையவில்லை. தண்டவாளத்தின் மெல்லிய அதிர்வும் அடங்கவில்லை. ஆம் தோழர்களே. அதனை தவறவிட்டதால் நாளைய முதல் ரயிலுக்காய் காத்திருப்பவன் என யூகித்தால் அதனையும் தவறவிடப் போகிறவன் நான்.
தவறவிடுதலின் வலியும் காத்திருத்தலின் கணங்களும் தேவையாயிருக்கிறது, அது மட்டுமே தேவையாயிருக்கிறது, இப்படியே இருந்துவிடலாம் போலிருக்கிறது
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க
இல்லை மது.ஏன் நம்பிக்கை குறைவாக.நாளை நேரத்துக்கே எங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளலாமே !
ReplyDeleteமென்மையான அதேபோல் வலிமையான வலியை பகிர்ந்து செல்கிறது.
ReplyDeleteகாத்திருத்தலும் தவற விடுவதும் தவிர்க்க முடியதாகி விடுகிறது சில கணங்களில்
ஆம்.. நல்லாயிருக்கு...
ReplyDeleteநல்ல எழுத்து அதிர்வலைகளைத் தோற்றுவிக்கும் எனில் இந்த கவிதையின் உள்முரண் அதை தொடர்ந்து உருவாக்குகிறது.வித்யாசமான வாசிப்பு அனுபவம்.
ReplyDeleteநன்றி.
காத்திருந்து தவறவிட்டவன் மீண்டும் தவறவிடுவதற்கே காத்துநிற்கும் அபூர்வம் வெகுசிலருக்கு மட்டும்.வித்யாசமான கவிதை மதுமிதா.
ReplyDeleteநாளையும் தவற விடுங்கள் நண்பரே...
ReplyDeleteஏனென்றால் இன்னொரு கவிதை கிடைக்கும் இதை போலவே..அழகாக
யாத்ரா சொன்னதைப்போல ஒரு வேளை தவறவிடுதலின் வலியும் காத்திருத்தலின் கணங்களும் தான் வாழ்கையோ?
ReplyDelete