புத்தம் புது வார்த்தை
வார்த்தை
போதாமையால்
முடிக்கப்படாமல்
இருக்கிறது
அக்கவிதை
விழிகள்
திறக்கப்படாத
ஓர் ஓவியம்
போல்.
உபயோகித்து
மழுங்கிப்
போனவைகளையும்
பொய்ப் புனிதம்
ஏற்றப்பட்ட
வார்த்தைகளையும்
விலக்கினால்
மிஞ்சுபவை
ஒன்றுமில்லை.
நியூட்டனுக்காய்
உதிர்ந்த
கனி போல்
தன்னை
வெளிப்படுத்திக்
கொள்ளாமலாப்
போய்விடும்
ஒரு
புதிய வார்த்தை.
ம்ம்..நிச்சயமாய்..
ReplyDeleteகாத்திருங்கள்..
அருமை நண்பரே
ReplyDeleteகாத்திருங்கள் ...
காத்திருக்கிறோம் ...
காத்திருப்போம் ....
விழிகள் திறக்கபடாத ஓவியம் போல.. அருமை!
ReplyDeleteஎல்லாவற்றையும் துறந்த நிசப்தம் பருகிய மொழி கொண்டுவரும் அந்த வார்த்தையை.காத்திருக்கிறேன் மதுமிதா நாளைக்காக.
ReplyDeletenice..
ReplyDeleteகதைகள் தன்னை வெளிப்படுத்த " என்னை" ஒரு காரணியாய் பயன்படுத்திக்கொள்கின்றன.- லா.ச.ரா
நியூட்டனுக்காய்
ReplyDeleteஉதிர்ந்த
கனி போல்
இல்லாவிடினும் கலிலியோ போல் கண்டு பிடிக்கவாவது ஏதுவாகட்டும் .
கவிதைகள் மிகநன்றாக உருபெறுகிறது சார் ..பிடித்திருக்கிறது