கவிதை குறித்து
கண்ணாடிச்
சுவரில்
வழுக்கி
விழும்
மழைத்
துளிகளைப்
போல்
நழுவி
விடுகின்றன
கவிதைக்கான
சாத்யங்கள்.
தன்
கூடை
தானே
சுமந்து
செல்லும்
நத்தையைப்
போல்
வார்த்தைகளைச்
சுமந்து
அலைகிறதொரு
கவிதை.
கனவிற்கு
வர்ணம்
தீட்டப்
போகிற
கவிதையை
எழுதப்
போகும்
கவியைத்
தேடிக்
கொண்டிருக்கிறதொரு
கவிதை.
இன்றைக்கு இங்கே மழை.அங்கேயும் அப்படித்தான் என்பது கவிதைகளின் இடைவெளிகளில் தெரிகிறது.மூன்றும் ஒரு புள்ளியிலிருந்து வெவ்வேறு ஓவியங்களின் மையத்துக்கு நகர்கின்றன.சபாஷ் மதுமிதா.
ReplyDeleteஅழகிய கவிதை ! வாழ்த்துக்கள் ... எனது blog இற்கு அழைக்கிறேன் .... www.moongilvanam.blogspot.com
ReplyDeleteநத்தை குறித்த கவிதை அழகியல் ருசித்த இன்பம்.
ReplyDeleteகவிதைகள் அருமை..
ReplyDeleteமிக கவித்துவமான கவிதை.உள்ளடக்க அழகோடு அவற்றின் அர்த்தத்திற்கு நெருக்கமான உருவ அழகும் கூடி வந்துள்ளது.
ReplyDelete