A Great Collection of all Tamil aggregators

Thursday, October 21, 2010

சாத்தியம்

ஒரு
வண்ணத்து
பூச்சியின்
பயணக்
குறிப்பை
மொழிபெயர்த்து
விடலாம்
உறக்கத்தில்
புன்னகைக்கும்
குழந்தையின்
கனவினை
அறிய முடிந்தால்.

7 comments:

  1. ஒரு குழந்தையைப் போல ஒரு கவிதையை என்னால் எழுத முடியவில்லை என்று தாகூர் சொன்னார். யாழ்,குழல் இவற்றினும்
    மழலை இனிதென்றார் வள்ளுவர். குழந்தையின் கனவினில்
    நுழையும் தகுதி நமக்கிருக்கிறதா என்ன? இருப்பினும் உன்னுடைய
    சாத்தியம் உன் மனதின் நெகிழ்வைக் காட்டுகிறது. கவிதைகள் அற்புதமானவை என்பதை உறுதிச் செய்கிறாய். உறரணி.

    ReplyDelete
  2. ஆஹா.. அற்புதம்!! நறுக்'குன்னு சொல்லிட்டிங்க!!

    ReplyDelete
  3. நன்றி வெறும்பய..
    நன்றி நிலாமகள்.
    நன்றி ஹரணி..குழந்தைகளின் கனவில் நுழையும்
    தகுதியில்லையெனினும் ஆசை உள்ளது. ஓவியனை
    தொந்தரவு பண்ணாமல் ஓவியத்தை பார்க்கும் ஆசை
    போல.

    ReplyDelete
  4. நிறைவேறாத ஆசை என்பார்களே .. அது இது தானா
    அதை கவிதைக்குள் பிடித்திருப்பது அழகு

    ReplyDelete
  5. ஒரு வண்ணத்துப் பூச்சியின் பயணக்குறிப்பையும்-உறக்கத்தில் புன்னகைக்கும் மழலையின் கனவையும்- தமிழில் மொழிபெயர்த்திருக்கும் உன் கவிதையும் அதற்கு ஒப்பானதுதான் மதுமிதா.மயங்கினேன் உன் தமிழின் போதையுண்டு.

    ReplyDelete