A Great Collection of all Tamil aggregators

Saturday, October 9, 2010

ஒற்றைப் பாதை


கிருஸ்து
கிருஷ்ணன்
புத்தர்
மார்க்ஸ்
காந்தி
ரமணர்
ஜேகே
ஓஷோ.
இவர்களைச்
சென்றடையும்
ஒற்றைப் பாதை
எங்கிருந்து
ஆரம்பிக்கிறது?
சாலையோரம்
கடவுள் சாயலில்
நின்று
கொண்டிருந்தவரிடம்
கேட்டேன்.
வெண்தாடியை
உருவியவாறு
மென்குரலில்
சொன்னார்:
’நூலகத்திலிருந்து’.

3 comments:

  1. கற்றலின் சிறப்பு கடவுளைக் கண்டடைகிறது.அபாரம் மது.

    ReplyDelete
  2. கல்விதான் கடவுளைக் கண்டடைய வழி என்கிறீர்கள்.படித்தாலும் மனம் பக்குவப்பட்டால்தானே !

    ReplyDelete
  3. ’நூலகத்திலிருந்து’. ... நிறையவே யோசிக்க வைக்கிறது மது ...
    சமிபத்தில் நான் படித்ததில் மிக மிக சிறப்பான கவிதை. மகிழ்ச்சி

    ReplyDelete