A Great Collection of all Tamil aggregators

Thursday, October 7, 2010

வரங்கள்

பேருந்து
பயணத்தில்
வாய்த்த
குழந்தையின்
புன்னகை.

*************

தளர்ந்து
அமர்கையில்
கன்னம்
தடவும்
மென் இறகு.

************

பருகி
முடித்த
தேநீர்க்
கோப்பையின்
விளிம்பில்
வந்தமரும்
வண்ணத்துப்பூச்சி.

*************

பழைய
புத்தகத்திலிருந்து
தன்னை
விடுவித்துக்
கொண்டு
வெளிப்படும்
காதல் கடிதம்.

**************

6 comments:

  1. வாழ்வின் அற்புத இழைகளை நெய்யும் உங்கள் கவிதை.வரம்தான் இதுவும்.கவிதையின் இறுதியில் செருக்கிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. //பழைய
    புத்தகத்திலிருந்து
    தன்னை
    விடுவித்துக்
    கொண்டு
    வெளிப்படும்
    காதல் கடிதம்//
    அருமை

    ReplyDelete
  3. மென்மை .. மென்மை ... மேன்மை

    ReplyDelete
  4. //பழைய
    புத்தகத்திலிருந்து
    தன்னை
    விடுவித்துக்
    கொண்டு
    வெளிப்படும்
    காதல் கடிதம்//

    கடிதங்கள் கிடைக்கப் பெறுவது என்றுமே வரம்தான்... அதிலும் காதல் கடிதம்?! :)

    ReplyDelete
  5. மது...அத்தனையும் வரம்தான் !

    ReplyDelete
  6. வரங்கள் மனதை சுகப்படுத்திய ஸ்வரங்கள்....உறரணி

    ReplyDelete