A Great Collection of all Tamil aggregators

Sunday, July 25, 2010

வீசும்
காற்றினை
அனுசரித்து
பயணிக்கும்
பாய்மரக் கப்பலின்
யுக்தியின்
வழி
நகர்கிறதென்
ஜீவிதம்.

***************

புதர்
மறைவிலிருந்து
வெளிப்படும்
மிருகத்தின்
நெற்றிக்காய்க்
காத்திருக்கிறது
ஒற்றைத் தோட்டா.

***************

வனத்தில்
திசை
மயங்கியவனுக்காக
விட்டுப் போகிறது
யானை
தன்
சாணத்தை.

3 comments:

  1. மூன்றாவதை தவிர்த்து
    என் புரிதலில் வாழ்வின் நிலையாக இரண்டு கவிதையும் தெரிகிறது.
    1.
    யதார்த்த வாழ்வு.
    (வேறு வழியில்லை என்பதைவிட அதன் போக்கிலே விட்டுவிடுவதும் ஒரு முறைதான்)
    2.
    வாழ்வின் திருப்பங்கள் அல்லது புதிர்கள்
    எந்த திசையிலிருந்து எந்த புதரிலிருந்து
    என்பது தான் தெரியவில்லை.
    3.
    முழு புரிதலில் நான் இல்லை.

    ReplyDelete
  2. மூன்றும் அருமை
    ஆனால் கண் போன போக்கிலே கால் போக விட இயலுமா?

    ReplyDelete
  3. Velkannan சொன்ன புரிதலின் வழியே தான் நானும் பயணிக்கிறேன். மூன்றாவதிலும் வாழ்க்கை தான் தெரிகிறது. அதில் நீங்கள் சொல்வது எதிர்பார்ப்பில்லாமல் சமயங்களில் நம்மை சேரும் உதவிகளையோ?

    கவிதைள் அருமைங்க!

    ReplyDelete