A Great Collection of all Tamil aggregators

Sunday, November 27, 2011

REVOLUTION 2020



Five point someone
One night @ the call center
The 3 mistakes of My life
2 states : The story of my marriage.
இந்த வரிசையில்
சேத்தன் பகத்தின்
ஐந்தாவது நாவல்
Revolution 2020.

Engineering Entrance Test ல்
Rank வாங்க
மாணவ,மாணவியர்கள்
பெற்றோர்களின் வற்புறுத்தலால்
படும் அவதிகளை மட்டும்
பேசவில்லை இந்த நாவல்.

பணத்தைக் குறிவைத்து
புது வெள்ளமென
முளைக்கும்
பொறியியல் கல்லூரிகளைப்
பற்றியும் எழுதியுள்ளார்
அரசியல் கலந்து.

கூடவே காதலும்
அதற்கே உரிய
கொஞ்சம்
அத்துமீறலும்.

Love.
Corruption.
Ambition.

இந்த மூன்று விஷயங்களும்
அனைவருடனும்
பிணைந்துள்ளது போல்
நாவலில் வரும்
ஆர்த்தி
கோபால்
ராகவ்
மற்றும்
சுக்லாஜி
அனைவரையும்
இயங்க வைக்கிறது.

நம் தேசம் குறித்த
விமர்சனத்தை
சேத்தன் அடங்கிய
தொனியில்
வைக்கிறார்.

இவரது எல்லா நாவல்களின்
கடைசியிலும்
ஒரு Magic நடக்கும்.
இதிலும் கூட.

சேத்தன்
ஆங்கிலத்தில் எழுதும்
சுஜாதா.
(வாத்தியாரின் சிஷ்யர்கள்
கோபிக்க வேண்டாம்.)

நாவலின்
கடைசியில்
ஆசிரியர்
சொல்வார்.
“You are a good person”.


CHETAN BHAGAT க்கும்
இதையே நாம் சொல்வோம்.
“You are good Chetan".




இந்தப் புத்தகத்தை
எனக்கு அனுப்பிய
ப்ரியாவுக்கு
மேலே உள்ள
பூக்கள் அனைத்தும்.

Friday, October 14, 2011

அஞ்சலி





மேதைகளின் பிரிவிற்குப் பின்
அவர்கள் விட்டுச் சென்றதை
தக்க வைத்துக் கொள்வதன்
மூலமாகத்தான் அவர்களை
கெளரவிக்க முடியும்.

Saturday, June 18, 2011

ரகசியம்



ரோஜாவுடன்
பேசிக் கொண்டிருந்த
என் மகளைப்
பார்த்த
தினம் தான்
புரிந்தது.
தாவரங்கள்
என்னுடன்
உரையாட
மறுத்ததன்
ரகசியம்.

Sunday, June 5, 2011

ப்ரிய சகி









இனிதென்பர்
உன் குரல்
கேளாதார்.

Thursday, May 26, 2011

தருணம்



அடர்வனப்
பச்சை இருளில்
திசை
மயங்கித்
திரிகையில்
புதர்ச் சரிவிலிருந்து
முதுகில்
தைக்கும்
பளபளக்கும்
கண்களை
சந்திக்கும்
தருணத்திற்காய்
காத்திருக்கிறது
ஒரு மரணமும்
நீள்குழல்
துப்பாக்கியின்
தோட்டாவும்.

Friday, May 20, 2011

பிரிய சகி


மழை
வண்ணத்துப்பூச்சி
நிலா
காதல்
வறுமை
முத்தம்
பூ
புரட்சி
ஸென்
இல்லாமல்
கவிதை
எழுத
இயலுமாவெனக்
கேட்டவருக்கு
எழுதிக்
கொடுத்தேன்
உன்
பெயரை.

Wednesday, May 11, 2011

வாழ்வெனும் நதி


ஒரு
மனிதனின்
மரணத்துடன்
முடிந்து
விடுவதில்லை
அவனது
வாழ்வு.
அவனது
குழந்தையின்
குழந்தையின்
குழந்தையின்
பார்வை
வழி
வாழ்ந்து
கொண்டிருக்கக்கூடும்
என்பது
உண்மையெனில்
எனது
தாத்தாவின்
தாத்தாவின்
தாத்தாவினது
வாழ்வைத்தான்
வாழ்ந்து
கொண்டிருக்கிறேனா?

Wednesday, April 27, 2011

கோடைத் திருவிழா


புத்தகங்கள்
வாசிப்பதில்லை.
கவிதை
எழுதுவதில்லை.
இசை
கேட்பதில்லை.
திரைப்படம்
பார்ப்பதில்லை.
விளையாடிக்
கொண்டிருக்கிறேன்
குழந்தைகளுடன்
அவர்களின்
உலகத்தில்.

Friday, March 11, 2011

விற்பனை


காய்கறி
பழம்
தேங்காய்
மீன்
கருவாடு
அப்பளம்
போளி
குச்சிஐஸ்
சமோசா
உப்பு
பலூன்
போர்வை
புடவை
நைட்டி
உள்ளாடை
வேர்க்கடலை
அலுமினிய பாத்திரம்
வெள்ளரிபிஞ்சு
இளநீர்
எதையாவது
விற்றுக்
கொண்டிருக்கிறார்கள்.
வாங்குவதற்கு
எவருமில்லாமல்
அழுகிக்
கொண்டிருக்கிறது
பேரன்பு.

Monday, February 7, 2011

சொல்லாமல் விட்டது



பயமாகத்தான்
இருக்கிறது
மனிதர்களுடன்
சேர்ந்து
வாழ.

Wednesday, February 2, 2011

வரும் முன்



புத்தக
மூட்டையுடன்
அம்மா
வருவதற்குள்
ஆடி
முடித்து
விடு.

Friday, January 28, 2011

வேண்டுகோள்




முதலும்
முடிவும்
அறிந்தவன்
நான்.

கால
இயந்திரத்திலேறி
பின்னோக்கி
சென்று
கண்டேன்
பூமியில்
மனிதன்
பிறக்கவில்லை
என்பதை.

முன்னோக்கி
சென்று
கண்டேன்
பூமியில்
மனிதன்
அழிந்து
விட்டான்
என்பதை.

ஆம்.
தோழர்களே.

முதலும்
முடிவும்
தெரிந்ததால்
என்
பெயர்
கடவுளென
எவரும்
யூகிக்க
வேண்டாம்
என்பதுவே
என்
வேண்டுகோள்.

Sunday, January 23, 2011

செய்யா நாற்பதில் சில



பார்வையால்
தொடரும்
அப்பாவின்
உடல்நலம்
விசாரித்திருக்கலாம்.
தகுதி அட்டையைக்
காட்டிய
மகளிடம்
கை குலுக்கியிருக்கலாம்.
எதிர்பட்ட
பக்கத்து வீட்டுக்காரரைப்
பார்த்துப்
புன்னகைத்திருக்கலாம்.
கோவில் வாசலில்
கை நீட்டிய
முதியவருக்கு
உணவிட்டிருக்கலாம்.
வீதியில்
அடிபட்டுக் கிடந்த
வண்ணத்துப் பூச்சியை
ஓரமாய்
எடுத்து விட்டிருக்கலாம்.
தெருவோரம்
கழிவுகளை
அகற்றிக் கொண்டிருந்த
தொழிலாளிக்கு
ஒரு கோப்பைத்
தேநீர் வாங்கி
தந்திருக்கலாம்.
அலைபேசிக்
கொண்டே
ரயில் தண்டவாளங்களைத்
தாண்டாமல்
இருந்திருக்கலாம்.

Monday, January 3, 2011



கனவில்
வீழ்ந்த
பெருமரத்தால்
அதிர்வடைகிறதென்
கவிதை.

***********************

மயிலிறகு
நீரில்
விழுவதைப்
போல்
நிகழ
வேண்டும்
என்பதே
அவா.
பாறாங்கல்
உருள்வது
போல்
ஆகிவிடுகிறது
பல
சமயங்களில்.

***********************

ஒரு
சாதுர்ய
தூரிகையின்
வர்ண
முயக்கத்தில்
மூழ்கியிருக்கும்
உருவத்தை
யூகிக்க
முடிந்தால்
அடுத்தவரின்
கனவுக்குள்
நுழைந்தும்
விடலாமென்பதே
அறிவுறுத்தல்.

***********************