A Great Collection of all Tamil aggregators

Monday, July 19, 2010

இரண்டு படங்கள்



இந்த வாரம் இரண்டு படங்கள் பார்த்தேன்.
இரண்டும் என்னை வசீகரித்தன.

Inception (2010)
***************
தொழில் நுட்பத்தால் நம்மை பிரமிக்க வைத்த படங்கள் ஏராளம்.
மதி நுட்பத்தால் வியக்க வைத்த படம் இது.
ஒருவர் கனவில் மற்றவர் புகுவது.
நம் கனவை நாமே அமைத்துக் கொள்வது.
ஒருவர் மூளையில் பதிந்திருக்கும் ஒரு ஐடியாவை வெளியே எடுத்து விட்டு
வேறொரு ஐடியாவை செருகுவது.
முடிவேயில்லாப் படிக்கட்டு.
சொல்லிக் கொண்டே போகலாம்.
கிறிஸ்டோபர் நோலன் படத்தின் இயக்குனர்.
ஒவ்வொரு சீனிலும் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது.
படத்தை முறையாக பின் தொடரவில்லை என்றால்
குழம்பிப் போவதற்கு சாத்தியமுண்டு.
நோலன் முன்பு Memento என்ற படம் எடுத்துள்ளார்.
முருகதாஸின் இயக்கத்தில் கஜினி என்றொரு படம் வந்ததே
அது இதன் அப்பட்டமான நகல்.




களவாணி
*********

ரொம்ப நாளைக்குப் பின் சந்தோஷமாய் ஒரு படம்.
சற்குணம் இயக்கியுள்ளார்.
தஞ்சை மண்ணுகே உரிய நக்கல்.. நையாண்டி.
எந்த் சிடுமூஞ்சியும் இதழ் பிரிக்காமல் படம் பார்க்க முடியாது.
மிக எளிமையாய் நகர்கிறது படம்.
இந்த புதியவரிடம் so called ஜாம்பவான்கள்
பாடம் கற்றுக் கொண்டால் நம்மை மாதிரி ரசிகர்கள்
பிழைத்துப் போகலாம்.

2 comments:

  1. பகிர்வுக்கு நன்றி . //முருகதாஸின் இயக்கத்தில் கஜினி என்றொரு படம் வந்ததே அது இதன் அப்பட்டமான நகல்.// வருத்தம் என்னவென்றால் அவர் ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை என்பது தான் (இப்படியான இயக்குனர் இங்கே நிறைய உண்டு)
    களவானி இன்னும் பார்க்கவில்லை. குறைந்த வரிகளில் இன்றே பார்க்கும் ஆவலை தூண்டி விட்டிர்கள். நன்றி.

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு தோழரே...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete