A Great Collection of all Tamil aggregators

Thursday, July 22, 2010

மாறுதல்



நீந்தி
கிளிஞ்சல்கள்
பொறுக்கி
வீடு கட்டி
சிதைத்து
திளைத்த
ஞாபகச்
சுவடின்றி
அலை
தொடா
தூரத்தில்
புகைப்படம்
எடுத்தவாறு
நான்.

என்றும்
மாறுவதில்லை
கடல்.

4 comments:

  1. //அலை
    தொடா
    தூரத்தில் //
    இந்த வரிகள் மனதை எதையோ செய்கிறது நண்பரே. எப்பொழுதுமே தொட முடியாத தூரத்தில் அலைகள் மட்டும் அல்ல. சரிதானே நண்பரே. அதே போல் மாறாதிருப்பதும் (என்றும்/மாறுவதில்லை/கடல்). அருமை .

    ReplyDelete
  2. அழியாத கோலங்களின் உணர்வு சிக்கனமான அபாரமான இந்தக் கவிதை.கண்கள் பனித்தது மது.

    ReplyDelete
  3. கவிதையின் கடல்ப்பார்வை மிக அருமை..தொட முடியாத தூரங்களில் சில சமயம் நம் பிரியங்கள்தான் அதிகமிருக்கிறது...நன்று.

    ReplyDelete
  4. கவிதையின் கடல்ப்பார்வை அருமை...

    ReplyDelete