A Great Collection of all Tamil aggregators

Saturday, June 26, 2010

ஏன் இப்படி?

எனக்கு ஜெயமோகனின் எழுத்துகள் மீது அபார மோகம்.
அதே மாதிரி சாருநிவேதிதாவின் எழுத்துக்கள் மீதும்.
இரண்டு பேரின் எழுத்துக்கள் வெவ்வேறு வகை.
ஆனால் இவர் அவரின் எழுத்துக்களைப் புறந்தள்ளுகிறார்.
அவர் இவரின் எழுத்துக்களை எள்ளி நகையாடுகிறார்.
உபரியாய் இவரின் ரசிகக்கூட்டம் அவரையும்
அவரின் ரசிகக்கூட்டம் இவரையும் போட்டுத் தாக்குகிறார்கள்.
அதனை இலக்கிய விமர்சனம் என்றும் எடுத்துக் கொள்ளமுடியவில்லை.
பின் என்னதான் நடக்கிறது?
இதேமாதிரி காலச்சுவடும் பிடிக்கும். உயிர்மையும் பிடிக்கும்.
ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம்
இருவரும் (கண்ணன்,மனுஷ்யபுத்திரன்) ஒருவரை ஒருவர்
சாடிக் கொள்கிறார்கள்.
இவைகளுக்கிடையே நான் மிரள மிரள விழித்துக்கொண்டு
நிற்கிறேன். எதாவது ஒரு பக்கம் ஒதுங்குவதுதான்
பொது நியதியோ?

7 comments:

  1. உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான் நண்பரே..! நிறைய பதிவுகள் படைத்திட வாழ்த்துகள்..!

    ReplyDelete
  2. நண்பரே நாம் யார் பக்கமும் ஒதுங்க வேண்டியதில்லை. நம் ரசனையை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடைத்து வைக்க வேண்டியதில்லை. ரசனை அபிமானம் ஆகி பின் அதுவே வெறி ஆவதுதான் பிரச்சனை. தொடருங்கள்...

    ReplyDelete
  3. இது உங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான முதிர்ச்சி குறித்தது.சினிமாவில் ஹீரோக்களின் ரசிகர்கள் இப்படிக் கட்சி பிரிவார்கள். இங்கு ஹீரோக்களே இப்படி.என்ன எழுதுகிறோமோ அப்படியே வாழ்வதும் என்பது மிக உயர்வான நிலை.அதற்கான விலையும் அதிகம் மதுமிதா.

    ReplyDelete
  4. அவர்கள் எழுத்துகளை தாண்டி யோசிக்காதீர்கள்... நாம் அன்னப் பறவையை போல் அணுக வேண்டும் இவர்களை

    ReplyDelete
  5. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும். நமக்கு பிடித்ததை நாம் எடுத்துக்கொள்வோம்.
    எழுத்துக்களில் எழுத்தாளர்கள் பெரும்பாலும் இல்லை .
    சுந்தர்ஜி சொல்வதை போலத்தான் ,அது உன்னதம்

    ReplyDelete
  6. மதுமிதா..
    இன்றைக்கு நேற்றா இது நடந்து கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்த கூத்தை ஒவ்வொரு நிலையிலும் பார்த்து வந்திருக்கிறோம். சிற்றிதழ்களில் இவர்கள் ஒருத்தருக்கொருத்தல் சேரிச்சண்டையைவிடக் கேவலமாய் அடித்துகொள்வதற்காகப் பயன்படுத்திய பக்கங்களில் இவர்களின் சிறந்த படைப்புக்களை வெளிப்படுத்தியிருக்கலாம். நீ மிரளவேண்டியதில்லை. நமக்கு வேண்டியதை இலக்கியங்களில் சொன்னதுபோல அன்னப் பறவையாய் எடுத்துக்கொண்டுவிடலாம். வாசிக்கவும் அனுபவிக்கவும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் மகிழ்ச்சியுறவும் என்று இருந்தால் போதும். எழுத்தின் வேலை அதுதானே? சண்டையிடும் எழுத்து பற்றி நேரம் செலவு செய்யாதே..உனது வன்மைமிகு படைப்புக்களைத் தா..அனுபவிக்கக் காத்திருக்கிறேன்.. அன்புடன் உறரணி.

    ReplyDelete
  7. நாம் நமக்கான தேடல்களில் இருக்கலாம் மதுமிதா. அதற்கே நேரம் போதவில்லை..

    ReplyDelete