A Great Collection of all Tamil aggregators

Saturday, July 21, 2012

கலங்கிய நதி

தமிழிலும்,ஆங்கிலத்திலும் எழுதும் மிகச் சிலரில் பி.ஏ.கிருஷ்ணனுக்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கலாமெனத் தோன்றுகிறது அவரது கலங்கியநதியைப் படித்த பின். கதைச் சுருக்கம் எழுதுவது இந்த நாவலுக்குச் செய்யும் துரோகம் என்றாலும் ஒற்றை வரி. அஸ்ஸாமில் ஒரு தீவிரவாதக் கூட்டத்தால் சிறை பிடிக்கப் பட்ட இன்ஜினியர் ஒருவரை மீட்கச் செல்லும் அரசு அதிகாரியும்,அவரது அனுபவங்களும். ஆதவனையும்,இந்திரா பார்த்தசாரதியையும் சில இடங்களில் ஞாபகப் படுத்தினாலும் பல இடஙகளில் மீறுகிறார். இதழ் பிரிக்காமல் சிரிக்க வைக்கும் குறும்புகள் நிறைய இடங்களில் தட்டுப் படுகின்றன. இவரது பிற நூல்கள்: புலிநகக் கொன்றை. (The Tiger Claw Tree) அக்கிரகாரத்தில் பெரியார். திரும்பிச் சென்ற தருணம். கலங்கிய நதி. (The Muddy River). காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுளளது. ஒரு படைப்பாளனுக்கு கிடைக்கும் மிகப் பெரிய கெளரவம் அவனது படைப்பு நிறைய பேரைச் சென்று அடைவதுதான். கிருஷ்ணனும் நிறையப் பேரைச் சென்று அடைய வேண்டும்.

3 comments:

  1. நல்ல நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  2. இவருடைய படைப்புகளில் ஒன்றைக் கூட
    இதுவரை படித்ததில்லை
    தங்கள் பதிவு படிக்கும் ஆவலைத் தூண்டிப்போகிறது
    அவசியம் இந்த மாத வாசிப்பில்
    அவருடைய நாவல் இருக்கும்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. ஹப்பா! வந்தூட்டீங்களா சாமீ மார்ச்சைத் தாண்டி!

    இந்த மாதிரி செலெக்டிவ்வா அறிமுகப்படுத்தறதுதான் உங்க ஸ்டைல்.

    ஹரணியும் நானும் பேசும் போது தவறாம குசலம் விசாரித்துக்கொள்வது நீங்க எழுதாம இருக்றதப் பத்தித்தான் இருக்கும்.

    உங்க இடம் காலியாவே இருக்கு மதுமிதா.

    ReplyDelete