A Great Collection of all Tamil aggregators

Wednesday, March 7, 2012

என்ன நடக்கிறது இங்கே?



என் சகோதரியின் மகள் இந்த வருடம்
+2 எழுதுகிறார்.
அவரது வகுப்புத் தோழியைப் பற்றிய
செய்தி இது.
பக்கது கிராமத்திலிருந்து இந்த நகரத்திற்கு
இவரது படிப்பிற்காக வந்து
தங்கியிருக்கிறார்கள்.
பெண்கள் மட்டும் உள்ள வீடு.
தகப்பனார் அயல் தேசத்தில்.
தோழிக்கு நிறைய கனவுகள் உண்டு.
அதில் மருத்துவராக வேண்டும்
என்பதும் ஒன்று.
இன்றைக்கு ஆரம்பிக்கும் தேர்வுக்கு
போக முடியாதென
மறுத்து விட்டார்.
சுற்றம் சூழ
அனைவரும் வற்புறுத்தியும்
தீர்மானமாக மறுத்துவிட்டார்.

காரணம் பயம்.

இதுதான் நம் பள்ளிகள்
நம் குழந்தைக்கு
கற்றுத் தரும் பாடம்.

ஒரு குழந்தையை வைத்து
பள்ளியை எடை போடக்கூடாதென
மறுப்பு எழலாம்.

இது ஆரம்பம்தான்.
தொடரும் என்றுதான்
தோன்றுகிறது.

பாவம் நம் குழந்தைகள்.

2 comments:

  1. அவர்களுக்கு மட்டும் இல்லை
    நமக்கும் குழப்பமாக்தான் இருக்கிறது
    என்ன செய்வதென்று தெரியவில்லை
    சிந்தனையை தூண்டிச் செல்லும் பதிவு

    ReplyDelete
  2. ஏன் பயப்படணும்ன்னு எனக்குப் புரியல.அப்பா வெளிநாட்டில் என்பதால் பணப்பிரச்சனையும் இல்லை !

    ReplyDelete