A Great Collection of all Tamil aggregators

Friday, November 26, 2010

வானமே எல்லை இல்லை

உன் பாதங்களில்
அறையப்பட்ட
ஆணிகளை
அகற்று.
சுதந்திரம்
கல்வி
இவ்விரு
சிறகுகளைப்
பொறுத்திக் கொள்.
மண் உதைத்து
உயரக் கிளம்பு.
வானமே எல்லை.
இப் பொது
விதி உனக்கல்ல.
ஆகாயத்திற்கு
அப்பாலும்
ஆச்சர்யங்கள்
இருக்கக் கூடும்.
தேடு.
தேடல்தான்
வாழ்ந்ததற்காய்
நாம்
விட்டுச் செல்லும்
அடையாளம்.
அது
மணலில் விட்ட
காலடித் தடமல்ல.
மலையில்
செதுக்கியச்
சிற்பம்.

6 comments:

  1. தேடல்தான்
    வாழ்ந்ததற்காய்
    நாம்
    விட்டுச் செல்லும்
    அடையாளம்.
    அது
    மணலில் விட்ட
    காலடித் தடமல்ல.
    மலையில்
    செதுக்கியச்
    சிற்பம்.

    சிற்பமாய்ச் செதுக்கப்பட்ட கவிதையும் பொருளும். அருமை மதுமிதா.

    ReplyDelete
  2. //ஆகாயத்திற்கு அப்பாலும்
    ஆச்சர்யங்கள் இருக்கக் கூடும்//
    அருமை..

    ReplyDelete
  3. மண்ணை நீங்கி, விண்ணைத் தாண்டி,
    விய‌ப்புக‌ள் க‌ண்டு, வாழ்வை ப்திவோம்,
    ம‌லையில்.(ம‌ழையில் பின்னோட்ட‌மாயும்)

    ReplyDelete
  4. தேடல்தான்...அடையாளம். வரிகள் அருமை. பொறுத்திக்கொள் என்பதில் பொருத்திக்கொள் என்பதுதான் சரி.

    ReplyDelete
  5. நல்லாயிருக்குங்க சார்

    ReplyDelete