A Great Collection of all Tamil aggregators

Thursday, May 26, 2011

தருணம்



அடர்வனப்
பச்சை இருளில்
திசை
மயங்கித்
திரிகையில்
புதர்ச் சரிவிலிருந்து
முதுகில்
தைக்கும்
பளபளக்கும்
கண்களை
சந்திக்கும்
தருணத்திற்காய்
காத்திருக்கிறது
ஒரு மரணமும்
நீள்குழல்
துப்பாக்கியின்
தோட்டாவும்.

6 comments:

  1. ம்...மரணம் எந்தநேரத்திலும்தான் !

    ReplyDelete
  2. ஒவ் .. மிக அருமை மது இந்த கவிதை
    (மீண்டும் வருகிறேன்)

    ReplyDelete
  3. நீள்குழ‌லின் நீள‌த்தில் வேறுபாடு ஒவ்வொருவ‌ருக்கும்.

    ReplyDelete
  4. அடர் வனம் மட்டுமல்ல மது
    பெரு நகரத்திலும் இது சாத்தியமே
    என்ன முழுவதுமாக மரணிக்க முடியவில்லை

    ReplyDelete
  5. வேல்கண்ணனின் கருத்திற்குப் பின் இன்னும் துலக்கமாய் கவிதை.பல் தள வாசிப்பிற்கு விரிவடைகிறது ஒரு நல்ல கவிதை என உணர வைத்தது உங்கள் கவிதை.

    ReplyDelete
  6. வேலுடைய கருத்துதான் ஆனால் பெரு நகரங்கள் மட்டுமல்ல என்ற நீட்சியோடு. அருமை தோழர்

    ReplyDelete