A Great Collection of all Tamil aggregators

Wednesday, May 11, 2011

வாழ்வெனும் நதி


ஒரு
மனிதனின்
மரணத்துடன்
முடிந்து
விடுவதில்லை
அவனது
வாழ்வு.
அவனது
குழந்தையின்
குழந்தையின்
குழந்தையின்
பார்வை
வழி
வாழ்ந்து
கொண்டிருக்கக்கூடும்
என்பது
உண்மையெனில்
எனது
தாத்தாவின்
தாத்தாவின்
தாத்தாவினது
வாழ்வைத்தான்
வாழ்ந்து
கொண்டிருக்கிறேனா?

7 comments:

  1. சந்தேகமேயில்லை.மனித வாழ்வுக்கென்றே விஷேசமாகத் தரப்பட்ட நிதர்சனம் !

    ReplyDelete
  2. சரியான இலக்கை அடைந்த கவிதைக்கும் படத்துக்குமாய்... பகிர்கிறேன் எனது வாழ்த்துகளை.

    ReplyDelete
  3. முப்பாட்டனின் கவிதைக்கு இந்த முப்பாட்டனின் பலே.

    ReplyDelete
  4. கேள்வியே பதில் நல்லாயிருக்கு மது

    ReplyDelete
  5. எனில் ஆதி மனிதனும், அதிநவீன மனிதனும் நீங்களே. தவிர பாரதி அல்லது எத்தனையோ மாமனிதர்களின் ரத்தம் தம்முள் பாய்வதாக எத்தனை பேர் நம்புகிறார்கள். உயிரின் நீட்சி அவரவர் தாக்கத்தாலும்.

    ReplyDelete
  6. தாத்தாவின்
    தாத்தாவின்
    தாத்தாவினது,
    "க‌ன‌வுக‌ளைத்தான்
    ந‌ன‌வாக்கிக்
    கொண்டிருக்கிறோம்."
    அதைக் க‌ண்டு அவ‌ர்க‌ள்
    கொண்டாடி
    கொண்டிருக்கிறார்க‌ள்
    அங்கே.

    ReplyDelete
  7. உண்மைதான். எதார்த்தமான கவிதை.

    ReplyDelete