A Great Collection of all Tamil aggregators

Wednesday, April 27, 2011

கோடைத் திருவிழா


புத்தகங்கள்
வாசிப்பதில்லை.
கவிதை
எழுதுவதில்லை.
இசை
கேட்பதில்லை.
திரைப்படம்
பார்ப்பதில்லை.
விளையாடிக்
கொண்டிருக்கிறேன்
குழந்தைகளுடன்
அவர்களின்
உலகத்தில்.

10 comments:

  1. அற்புதமான கணங்களை கைகளில் அள்ளிப் பருகுவது போலக் கவிதையும், மனம் ஒன்ற வைக்கும் அந்த சித்திரமும்.

    ReplyDelete
  2. அய்யோ அய்யோ, எப்படி வருகிறது உங்களுக்கு மட்டும் இப்படி?

    ReplyDelete
  3. இதையும் விட வேறென்ன வேண்டும் மதுமிதா?

    ReplyDelete
  4. 'எதுவும் அருந்துவ‌தில்லை
    அமிருத‌ம் ம‌ட்டும்...',
    என்ப‌தாய் க‌விதை.

    ReplyDelete
  5. எதிலும் முனைப்பின்றி
    சோம்பலாய் இருக்கிறேன்
    தன்னைத் தானே பார்த்துக் கொள்ளட்டும்
    என விட்டு விட்டேன் உலகத்தை
    பத்து நாட்களுக்கான அரிசி
    என் பையில் இருக்கிறது!
    கணப்பருகில் ஒரு கட்டு சுள்ளிகள்
    எதற்கு தொணதொணப்பு
    மாயையும் ஞானத்தையும் பற்றி?
    கூரையில் விழும்
    இரவு நேர மழையை செவிமடுத்தபடி
    வசதியாக அமர்ந்திருக்கிறேன்
    கால்களிரண்டையும் நன்கு நீட்டி.
    -என்ற ட்டய்கு ரியோக்கன் ஜென் கவிதையை என் அபிமான இடத்திலிருந்து பின்னுக்கு தள்ளி அமர்ந்து கொண்டது தங்கள் கவிதை.

    ReplyDelete
  6. அதை விட வேறு என்ன வேண்டும் ?

    ReplyDelete
  7. குறையொன்றுமில்லை கண்ணா ...
    இந்த தருணம் மட்டுமே போதும் வாழ்வெங்கும்

    ReplyDelete
  8. கவிதையுடனே வாழ்ந்து கொண்டிருக்கும்
    உங்களுக்கு
    படிப்பு எதற்கு படைத்தலும் எதற்கு
    தெளிவாகத்தான் இருக்கிறீர்கள்
    அதை தெளிவாகவும் கவியாக்கி இருக்கிறீர்கள்
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. :) ... bliss! kodai veyilin seetraththai thanippatharkku- kuzhanthaikalin sirippai vida kulirnthathoru baanam enakku therinthu kidayaathu!

    ReplyDelete