A Great Collection of all Tamil aggregators

Monday, January 3, 2011



கனவில்
வீழ்ந்த
பெருமரத்தால்
அதிர்வடைகிறதென்
கவிதை.

***********************

மயிலிறகு
நீரில்
விழுவதைப்
போல்
நிகழ
வேண்டும்
என்பதே
அவா.
பாறாங்கல்
உருள்வது
போல்
ஆகிவிடுகிறது
பல
சமயங்களில்.

***********************

ஒரு
சாதுர்ய
தூரிகையின்
வர்ண
முயக்கத்தில்
மூழ்கியிருக்கும்
உருவத்தை
யூகிக்க
முடிந்தால்
அடுத்தவரின்
கனவுக்குள்
நுழைந்தும்
விடலாமென்பதே
அறிவுறுத்தல்.

***********************

7 comments:

  1. முதல் :
    மென்மையாய் வருடுகிறது
    அடுத்தது :
    பெரும் அதிர்வை ஏற்படுத்துகிறது
    கடைசி :
    சில கேள்விகளை எழுப்பிகொள்கிறேன் எனக்குள்ளும்
    ('Inception' பார்த்து விட்டிர்களா , தவறியிருந்தால் கண்டிப்பாக பார்த்துவிடுங்கள் மது )

    ReplyDelete
  2. கவிதையின் அதிர்வுகள் கேட்கிறது என்னுள்ளும்...

    நீரில் விழும் மயிலிறகை பார்த்துக் கொண்டிருக்கையிலேயே முடிந்திருந்தால் எத்தனை சுகமாய் இருந்திருக்கும். நிதர்சனத்திலோ பாறாங்கல் வெகுவாய் கனக்கிறது!

    ReplyDelete
  3. அன்புள்ள..

    மூன்று கவிதைகளும் மென்மையின் மூன்று பரிமாணங்களைத் தொடுகின்றன.. முதல் கவிதை உண்மையான கலைஞனை அடையாளப்படுத்து கிறது. இரண்டாவது வாழ்வியலின் பெரும்பகுதி பாறாங்கல்லாகத்தான் பலருக்குத் தீர்மாணிக்கப்படு கிறது. இருப்பினும் அந்தப் பாறையைப் பிளந்து துளிர்க்கும் செடிபோல மீண்டுவிடும் மென்மை கவிதைக்கு பலம். மூன்றாவதில் மனம் இருக்கும் பாங்கிலேயே முயங்கியிருப்பதை அடையமுடியும். அப்போது அது வெவ்வேறு மென்மைகளைக் காட்சிப்படுத்தும். மூன்றும் முத்துக்கள்.

    ReplyDelete
  4. நன்றி கண்ணன்.
    Inception பார்த்து விட்டேன்.
    அது கனவிலா அல்லது நிஜத்திலா
    என்று தான் தெரியவில்லை.

    ReplyDelete
  5. நன்றி சுகிர்தா.
    கனவுக்கும்,நடைமுறைக்கும்
    உள்ள வித்தியாசம் அதான்.
    ஏன் நிறைய எழுத மாட்டேன்
    என்கிறீர்கள்.

    ReplyDelete
  6. நன்றி ஹரணி.
    உன் பின்னூட்டம் என் கவிதைகளை
    மறு உருவாக்கம் செய்கிறது.
    எனக்கே புதிதாய் இருக்கிறது.

    ReplyDelete
  7. http://ta.indli.com/ add ur Blogs everytime. u will get Lots of Visitors to ur Blog

    ReplyDelete