A Great Collection of all Tamil aggregators

Friday, December 17, 2010



துயர் மிகு
வரிகளை
எழுதி
முடிக்கும்
போதெல்லாம்
வந்து
விழுந்து
விடுகிறது
ஓற்றை
கண்ணீர்த்துளி
முற்றுப்
புள்ளியாய்.

***************

நெடிய
தனிமைப்
பயணத்திலும்
வந்து
சேர்ந்து
விடுகிறது
ஒற்றைக்
குழலொலி.

**************

காதலின்
சுவை
உப்புச்சுவை
தானோ?

**************
அம்மா
உன்
சிறகிலிருந்து
பிரிந்த
இறகு நான்.
வானத்தை
அளந்து
கொண்டிருக்கிறேன்
உன் நிழலில்.

*************

பெரும்
இரைச்சலுடன்
விழும்
அருவியில்
தனியனாய்த்
தலை
கொடுப்பதைப்
போலிருக்கிறது
உன் விழிகள்
என்னைச் சுற்றி
மல்லிகைக்
கொடியாய்
படரும்போது.

**************

9 comments:

  1. wow ......அருமை

    ஒற்றைக்
    குழலொலி.

    இனிமை தானே !
    படிக்கவே நன்றாகயிருக்கிறது

    ReplyDelete
  2. முதல் :
    ஆழமான ஆறுதல்.
    அந்த முற்றுப்புள்ளி எனக்கு பல வேளைகளில்.

    இரண்டு :
    ஒற்றைக்
    குழலொலி வாவ் எப்படியான ஏகாந்தம் அது.

    மூன்று :
    ஆனாலும் நால்லாயிருக்கு மது

    நான்கு :
    அம்மா ...
    அம்மா ...
    அம்மா ...

    ஐந்து :
    நன்றாகவே ரசித்து ...
    உணர்ந்து எழுதி இருங்கீங்க

    ReplyDelete
  3. துயரம்-இசை-காதல்-தாய்மை- என்று கவிதையின் ஆதார சுதியில் அழகாய் ஆலாபனை செய்திருக்கிறீர்கள் மதுமிதா.

    இருந்தாலும் முதலாம் கவிதையின் அனுபவம் எனக்கும் சித்தித்திருக்கிறது என்பதால் அது முதலாவதாகவே இருக்கட்டும்.

    ReplyDelete
  4. நல்ல வாசிப்பு அனுபவம்.குறிப்பாக மூன்றாவது கவிதை ஒரு குழந்தையின் குரலாகவே ஒலிப்பது போல் ஒரு பிரமையை ஏற்படுத்தியது. இறுதி கவிதையில் மல்லிகையின் மென்மைக்கும் இரைச்சலின் வன்மைக்குமான contrariness கவிதையை முழுமையாக்குகிறது.தவிர visual,auditory,tactile என வேறுபட்ட படிமங்களும் இந்த கவிதைகளில் சிறப்பாக உள்ளன. நன்றி.

    ReplyDelete
  5. //நெடிய
    தனிமைப்
    பயணத்திலும்
    வந்து
    சேர்ந்து
    விடுகிறது
    ஒற்றைக்
    குழலொலி.//

    அருமை!! :)

    ReplyDelete
  6. /காதலின்
    சுவை
    உப்புச்சுவை
    தானோ?/
    ஆத‌லால் தான் (உப்பிட்டாரை)உள்ள‌ல‌வும் நின‌த்துக் கொண்டே...

    ReplyDelete
  7. உதிரும் இறகு...காற்றின் தீராப் பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்லும்..என்ற ஒரு புகழ்பெற்ற கவிதைக்குப் பின் உதிரும் சிறகு குறித்து மாறுபட்ட சிந்தனையுடைய கவிதை மதுமிதா. வானை அளக்கிறது தாயின் நிழலில் சூபி தத்துவம் மிளிர்கிறது.

    ReplyDelete
  8. //காதலின்
    சுவை
    உப்புச்சுவை
    தானோ?//
    இல்லைங்க காதல் இனிப்புச் சுவை தான். சர்க்கரை வியாதி (லவ் பெய்லியர்) உள்ளவனும் விரும்பும் சுவை

    ReplyDelete