செய்யா நாற்பதில் சில
பார்வையால்
தொடரும்
அப்பாவின்
உடல்நலம்
விசாரித்திருக்கலாம்.
தகுதி அட்டையைக்
காட்டிய
மகளிடம்
கை குலுக்கியிருக்கலாம்.
எதிர்பட்ட
பக்கத்து வீட்டுக்காரரைப்
பார்த்துப்
புன்னகைத்திருக்கலாம்.
கோவில் வாசலில்
கை நீட்டிய
முதியவருக்கு
உணவிட்டிருக்கலாம்.
வீதியில்
அடிபட்டுக் கிடந்த
வண்ணத்துப் பூச்சியை
ஓரமாய்
எடுத்து விட்டிருக்கலாம்.
தெருவோரம்
கழிவுகளை
அகற்றிக் கொண்டிருந்த
தொழிலாளிக்கு
ஒரு கோப்பைத்
தேநீர் வாங்கி
தந்திருக்கலாம்.
அலைபேசிக்
கொண்டே
ரயில் தண்டவாளங்களைத்
தாண்டாமல்
இருந்திருக்கலாம்.
இருந்திருக்கலாம்
ReplyDeleteஇன்ஜினியரிங் படிக்காம இருந்திருக்கலாம் , பட்டியலில் இதை முதன்மையாக சேர்த்திருந்தால், உங்கள்ளுக்கு 1000 ஜே!
ReplyDeleteமுடிந்து போன தருணங்கள் கழிவிரக்கத்தின் விளிம்புகள் மெல்ல மெல்ல நகர்ந்து தண்டவாளத்தின் மையத்தில் அறைபடுகிறது.
ReplyDeleteஇருக்கும் ஒரு வாழ்வும் தொலைந்துபோகும்போது கலாம்களும் தொலைந்துபோகின்றன.
வலிக்கிறது மதுமிதா.
இப்போதான் மனம் பக்குவப்பட்டிருக்கிறது.எங்கள் வயதும் கழிந்தபிறகு கழிந்த நாட்களை சமபங்களை வரிசைப்படுத்துகிறது !
ReplyDeleteஅதானே... செய்ய வேண்டியதைச் செய்ய மனமில்லாததும், செய்யக் கூடாததைச் செய்வதில் பெரு விழைவுமாய் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம்...?!
ReplyDeleteதலைப்பு மிகக் கவர்கிறது என்னை.
.... இப்படி எழுதி எங்களை
ReplyDeleteவலிக்க செய்யாமல் இருந்திருக்கலாம்
(மிக நல்ல கவிதை மது)
எல்லாவற்றையும் இப்போதே செய்ய தூண்டும் கவிதை சார் ..
ReplyDeletei always think there should be no regrets in life ..
சின்னச் சின்னதாய் இத்தனை இருக்கலாம்களில், எத்தனை இருந்தன என் எண்ணுதல் நம் வாழ்தலின் ஒரு சுய மதிப்பீடாய் இருக்கலாம்.
ReplyDelete//அலைபேசிக் கொண்டே
ரயில் தண்டவாளங்களைத்
தாண்டாமல்
இருந்திருக்கலாம்.// சூப்பர் முடிவு.
(Ifs and Buts have some value like this)
//தெருவோரம்
ReplyDeleteகழிவுகளை
அகற்றிக் கொண்டிருந்த
தொழிலாளிக்கு
ஒரு கோப்பைத்
தேநீர் வாங்கி
தந்திருக்கலாம்.//
ஆமாம்... மென் மனதை உணர்கிறேன். நல்ல கவிதை...
பூங்கொத்து!
ReplyDelete