A Great Collection of all Tamil aggregators

Friday, December 3, 2010

தஞ்சை பிரகாஷ்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் முதல் விருது
ஆ.மாதவனுக்குக் கொடுக்கிறார்கள். இணையத்தில்
ஜெயமோகன் பக்கத்தில் ஆ.மாதவனின் நேர்காணல்
விரிவாய் வந்துள்ளது. அதில் மாதவன் தஞ்சை
பிரகாஷ் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
பிரகாஷ் வாழும் காலத்தில் மட்டுமல்ல, அவரது
மறைவுக்குப் பின்னும் கூட புறக்கணிக்கப்
படுவதாய் தோணுகிறது.
அங்கிள்
கள்ளம்
கரைமுண்டார் வீடு
மீனின் சிறகுகள்
மற்றும் மிக அற்புதமான சிறுகதைகள்.
அவர் எழுதியவை இன்னும் நிறைய.
அதைவிட அவர் பேசியவை மிக
மிக அதிகம்.
எங்கள் ஆசான் அவர்.
அவரின் கடலளவு சிஷ்யர்களில்
ஒரு துளி நான்.
சுந்த்ர்ஜி கூடவே இருந்தவர்.
இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள்
ஒவ்வொருவரும் பிரகாஷைப்
தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.

பி.கு: பிரகாஷ் உயிருடன்
இருந்திருந்தால் இதை எழுத
அனுமதித்திருப்பாரா என்பது சந்தேகம்.

3 comments:

  1. நினைவுகூறலுக்கு நன்றி மதுமிதா.

    ப்ரகாஷைப் பற்றிய ஒரு நேர்மையான-ஒப்பனையற்ற-இறந்த பின் முளைத்துவரும் கதைகள் தவிர்த்த-நினைவுக் குறிப்பொன்றை தஞ்சாவூர்க்கவிராயருடன் இணைந்து எழுத நினைத்திருந்தேன்.உங்கள் இடுகை ம் சீக்கிரம் என்று முன் த்ள்ளுகிறது.

    ReplyDelete
  2. தஞ்சை பிரகாஷ் பற்றி, கவிராயர், சுந்தர்ஜி, சுகன் மூலம் அறிந்து வியந்திருக்கிறேன். சுகனிடமிருந்து பெறப்பட்ட 'கள்ளம்' நாவல் இன்னும் படிக்கப் படாமல் பத்திரமாயிருப்பது உறுத்துகிறது உங்கள் பதிவு கண்டு. சிலரின் ஆளுமைப் பண்புகள் நாம் அறிமுகமற்றுப் போனோமே என்ற ஆதங்கத்தை வரவழைப்பவை. அப்படியான ஒருவர் பிரகாஷ் என உங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

    ReplyDelete