A Great Collection of all Tamil aggregators

Monday, December 13, 2010

சுனை

எல்லாவற்றையும்
துடைத்து
எடுத்து
விட்டதாக
எக்காளமிடாதே.
அன்பெனும்
சுனை
என்றும்
வற்றுவதில்லை
என்பதனை
சொல்லிக்
கொள்ள
ஆசைப்படுகிறேன்
மெலிதான
கர்வத்துடன்.

7 comments:

  1. உண்மையான அன்பு இருந்தால் கர்வம் இருப்பதில் தப்பேயில்லை !

    ReplyDelete
  2. மெலிதான கர்வம் தான் ஆனாலும் வலிமையானது அன்பினால் ஆனதால். சரிதானே மது ... ?

    ReplyDelete
  3. அனைவருக்குமான பொதுவுடைமையாக இந்த அன்பென்னும் வற்றாத ஜீவ நதி... கூடவே அதற்கான மென்கர்வமும்!

    ReplyDelete
  4. excellent. Truth. mellithaana karvam...but it is very very strong madumithaa. excellent.

    ReplyDelete
  5. இது உங்களுக்கான பிரத்யேகக் கடிதம்.

    நாம் இனி மாற்று குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் மதுமிதா.

    யாரின் பின்னும் இனிச் செல்லாது நாம் முன்நின்று அடிப்படையிலிருந்து எல்லாவற்றிலும் மாற்றத்தைத் தொடங்குவது மிக அத்தியாவசியம்.

    எல்லாக் கட்சிகளும் அவரவர் பங்குக்கு அவரவர் ஆட்சிக் காலங்களிலோ ஆளும் மாநிலங்களிலோ பல வகையான வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

    அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து தெளிவான சிந்தனையும் லாப நோக்கற்ற நெடுந்தூரப் பயணத்துக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம்.

    மதம் மொழி இனம் ஜாதி இவையெல்லாம் நான்கு சுவர்களுக்குள் அடைபடட்டும்.

    நம் கவனம் இனி திசைதிருப்புதல்களுக்கு ஆட்படாது யார் பெரியவர் சிறியவர் என்ற அகங்காரம் தொலைத்து ஒரு பெரும் இயக்கத்துக்கான நம்பிக்கையுடன் தமிழகத்திலிருந்து இந்தச் சுடரை ஏற்றுவோம்.

    பிற மாநிலங்களுக்கும் பின் இந்தியா முழுமைக்குமான வெளிச்சமாயும் விடியலாயும் இது சுடர் விடட்டும்.

    முதலடி எடுத்து வைக்க முனைவோம்.நாட்டை நேசிப்பவர்களை இணைப்போம்.அடுத்த தலைமுறைக்கான விடுதலைப் போராட்டமாக இது இருக்கட்டும்.

    காத்திருக்கிறேன் அருமை மதுமிதா.

    ReplyDelete