A Great Collection of all Tamil aggregators

Thursday, September 9, 2010

நிரம்பி வழியும் கோப்பை

இசையின்
மடிப்புகளில்
பதுங்கியிருக்கும்
மெளனத்திற்கான
தேடல்களுடன்
சுழன்று
கொண்டிருக்கிறேன்
இசைத் தட்டுகளுடன்.

*************************

இரவின்
குளிர்ச்சியில்
உருகிவிடுகிறது
எந்தவொரு
வெம்மையும்.

*************************

காற்றில்
ஆடும்
திரைச்சீலையைப்
போல்
உள்ளுக்குள்
அசைந்து
கொண்டேயிருக்கிறது
ஒரு
காமம்.

6 comments:

  1. காற்றில்
    ஆடும்
    திரைச்சீலையைப்
    போல்
    உள்ளுக்குள்
    அசைந்து
    கொண்டேயிருக்கிறது
    ஒரு
    காமம்.

    //

    உண்மை...

    கவிதைகள் அனைத்தும் அருமை..

    ReplyDelete
  2. அனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. முதல் கவிதையிலே நிரம்பிவிட்டேன்
    இரண்டும் மூன்றும் வழிந்தோடி கொண்டிருக்கிறது ... நண்பரே

    ReplyDelete
  4. மௌனத்தை தேடும் சுழற்சியும், உருகிய வெம்மையும், அசையும் காமமும் ...

    என்ன ஒரு introspection ! பலே

    ReplyDelete
  5. மூன்றுமே மெய்யுணர்த்தும் சிற்பங்கள். சிற்பியைத் தேர்வு செய்வதில் அவற்றுக்குள் குழப்பம் ஏதுமில்லை.மிக மிக மெருகேறியிருக்கிறது உங்களின் எளிமை.சபாஷ் என் நண்பனே!

    ReplyDelete
  6. நல்லா இருக்குங்க.

    ReplyDelete