அடர்வனப் பச்சை இருளில் திசை மயங்கித் திரிகையில் புதர்ச் சரிவிலிருந்து முதுகில் தைக்கும் பளபளக்கும் கண்களை சந்திக்கும் தருணத்திற்காய் காத்திருக்கிறது ஒரு மரணமும் நீள்குழல் துப்பாக்கியின் தோட்டாவும்.
ஒரு மனிதனின் மரணத்துடன் முடிந்து விடுவதில்லை அவனது வாழ்வு. அவனது குழந்தையின் குழந்தையின் குழந்தையின் பார்வை வழி வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும் என்பது உண்மையெனில் எனது தாத்தாவின் தாத்தாவின் தாத்தாவினது வாழ்வைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனா?