பார்வையால் தொடரும் அப்பாவின் உடல்நலம் விசாரித்திருக்கலாம். தகுதி அட்டையைக் காட்டிய மகளிடம் கை குலுக்கியிருக்கலாம். எதிர்பட்ட பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்துப் புன்னகைத்திருக்கலாம். கோவில் வாசலில் கை நீட்டிய முதியவருக்கு உணவிட்டிருக்கலாம். வீதியில் அடிபட்டுக் கிடந்த வண்ணத்துப் பூச்சியை ஓரமாய் எடுத்து விட்டிருக்கலாம். தெருவோரம் கழிவுகளை அகற்றிக் கொண்டிருந்த தொழிலாளிக்கு ஒரு கோப்பைத் தேநீர் வாங்கி தந்திருக்கலாம். அலைபேசிக் கொண்டே ரயில் தண்டவாளங்களைத் தாண்டாமல் இருந்திருக்கலாம்.