A Great Collection of all Tamil aggregators

Saturday, June 18, 2011

ரகசியம்



ரோஜாவுடன்
பேசிக் கொண்டிருந்த
என் மகளைப்
பார்த்த
தினம் தான்
புரிந்தது.
தாவரங்கள்
என்னுடன்
உரையாட
மறுத்ததன்
ரகசியம்.

8 comments:

  1. உங்கள் மகளுடன் நீங்கள் பேசத் தடையில்லையே மது?

    ReplyDelete
  2. வித்தியாசமான ஓர் கவிதை,
    தாவரங்களோடு பேசப் பழகிய மகள், இச் சொல்லாடல் இயற்கையை நேசிக்கும் உங்கள் மகளின் உணர்வுகளைச் சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  3. இயற்கையோடு பேசத் தொடங்கினால், பிறரின் கருத்துக்களைச் செவிமடுக்க முடியாதென்பதற்குச் சான்றாக உங்களின் கவிதை,

    ReplyDelete
  4. 'இன‌ம், இன‌த்தோடு", என்ப‌து புரிந்த‌தோ அக்க‌ண‌ம்?

    ReplyDelete
  5. வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
    நன்றி பகிர்வுக்கு.....

    ReplyDelete
  6. ரோஜாக்களின் உரையாடல் மன்ம் நிறைக்கிறது.

    ReplyDelete
  7. தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
  8. ஆஹா ஆஹா ஆஹா அழகு

    ReplyDelete