A Great Collection of all Tamil aggregators

Friday, March 11, 2011

விற்பனை


காய்கறி
பழம்
தேங்காய்
மீன்
கருவாடு
அப்பளம்
போளி
குச்சிஐஸ்
சமோசா
உப்பு
பலூன்
போர்வை
புடவை
நைட்டி
உள்ளாடை
வேர்க்கடலை
அலுமினிய பாத்திரம்
வெள்ளரிபிஞ்சு
இளநீர்
எதையாவது
விற்றுக்
கொண்டிருக்கிறார்கள்.
வாங்குவதற்கு
எவருமில்லாமல்
அழுகிக்
கொண்டிருக்கிறது
பேரன்பு.

12 comments:

  1. அன்பு விற்பனைக்கு இல்லைத்தானே !

    ReplyDelete
  2. கவிதை,பூவைப் போலவே தனித்த அழகோடு...அன்பை நினைவுபடுத்திய கவிதைக்கு நன்றி.

    ReplyDelete
  3. அன்பு விற்பனைக்கு அல்லதான். அது கொடுப்பதற்கு.
    நன்றி ஹேமா.

    நன்றி சைக்கிள்.

    ReplyDelete
  4. அன்பை வாங்க ஒருபோதும் முடியாது மதுமிதா. அது பெறுதல். அன்பைக் கொடுத்து அன்பை பெறுதல். செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்று சொல்வதுபோல. பேரன்பு என்பது கிடைத்தற்கரியது. அதைப் பெறுதல் வாழ்வின் பூரணத்துவம். கவிதை அழகு.இன்பம்.

    ReplyDelete
  5. மதுமிதா அவர்களுக்கு

    உங்கள் பதிவுகளில் எளிமையும் அன்பின் பேராழமும் காணக் கிடைக்கின்றன. இக்கவிதையும் அப்படித்தான் அன்பின் சத்தியத்தைக் கிளறிக் காட்டுகிறது.

    ReplyDelete
  6. எந்த சந்தையிலும் கிடைக்காத பேரன்பை சக மனிதர்களிடம் பகிரப் பகிர உயிர்த்துக் கிளை பரப்புமென நம்புவோம் நாம்.

    ReplyDelete
  7. வாங்குவதற்கு எவருமற்ற சூனியத்திலிருந்து வெளியேறினால் தேவைப்படும் உயிர்த்தடம் தெரியுமோ...

    ReplyDelete
  8. சிறப்பான கவிதை தான் ஆனாலும் சற்று வேறுபடுகிறேன் மது ...
    பேரன்பு என்றுமே அழுகி போகாது

    ReplyDelete
  9. செல்போன்,
    க‌த்தி,
    கிரிக்கெட் டிக்க‌ட்
    சிடி,
    சிக‌ப்பு கிரீம்,
    கோக்,பெப்சி,
    சாக்ல‌ட் ஸ்ப்ரே,
    டி ச‌ர்ட், ஜீன்ஸ்
    கொசு வத்தி,
    டாய்ல‌ட் கிளீன‌ர்
    கிளீனெக்ஸ்,
    ரெடி டு குக்
    முக‌மூடி என
    முய‌ன்று பாருங்க‌ள்.
    பிர‌ளய‌மே வ‌ர‌லாம், பின்னால்/ள்

    ReplyDelete
  10. வாங்குவதற்கு யாருமற்று போனால் என்ன.. அன்பு அதனளவில் மாறாது..

    ReplyDelete
  11. சரியாகப் புரிந்து கொள்ளப் படாத ஒரு படைப்பு இது. நாம் ஒருவருக்கொருவர் பட்டியலில் காணும் மற்றும் காணாதப் பொருட்களை பரிமாறிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பரிமாறுதல் என்னும் செயல் பெரும்பாலும் லாப நட்டக் கணக்குகளைக் கொண்டே நடத்தப் படுதலால் பகிர்தல் விற்றலாகிறது. அன்பு கவனிப்பாரற்று தேங்கிப் போகிறது. சரியா சந்தானக் கிருஷ்ணன். அற்புதம்

    ReplyDelete
  12. வாங்குவதற்கு
    எவருமில்லாமல்
    அழுகிக்
    கொண்டிருக்கிறது
    பேரன்பு.
    விற்கவோ வாங்கவோ முடியாத விலையற்ற பொருளாயிற்றே பேரன்பு..

    ReplyDelete