Sunday, November 27, 2011
REVOLUTION 2020
Five point someone
One night @ the call center
The 3 mistakes of My life
2 states : The story of my marriage.
இந்த வரிசையில்
சேத்தன் பகத்தின்
ஐந்தாவது நாவல்
Revolution 2020.
Engineering Entrance Test ல்
Rank வாங்க
மாணவ,மாணவியர்கள்
பெற்றோர்களின் வற்புறுத்தலால்
படும் அவதிகளை மட்டும்
பேசவில்லை இந்த நாவல்.
பணத்தைக் குறிவைத்து
புது வெள்ளமென
முளைக்கும்
பொறியியல் கல்லூரிகளைப்
பற்றியும் எழுதியுள்ளார்
அரசியல் கலந்து.
கூடவே காதலும்
அதற்கே உரிய
கொஞ்சம்
அத்துமீறலும்.
Love.
Corruption.
Ambition.
இந்த மூன்று விஷயங்களும்
அனைவருடனும்
பிணைந்துள்ளது போல்
நாவலில் வரும்
ஆர்த்தி
கோபால்
ராகவ்
மற்றும்
சுக்லாஜி
அனைவரையும்
இயங்க வைக்கிறது.
நம் தேசம் குறித்த
விமர்சனத்தை
சேத்தன் அடங்கிய
தொனியில்
வைக்கிறார்.
இவரது எல்லா நாவல்களின்
கடைசியிலும்
ஒரு Magic நடக்கும்.
இதிலும் கூட.
சேத்தன்
ஆங்கிலத்தில் எழுதும்
சுஜாதா.
(வாத்தியாரின் சிஷ்யர்கள்
கோபிக்க வேண்டாம்.)
நாவலின்
கடைசியில்
ஆசிரியர்
சொல்வார்.
“You are a good person”.
CHETAN BHAGAT க்கும்
இதையே நாம் சொல்வோம்.
“You are good Chetan".
இந்தப் புத்தகத்தை
எனக்கு அனுப்பிய
ப்ரியாவுக்கு
மேலே உள்ள
பூக்கள் அனைத்தும்.
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல அறிமுகம்.
ReplyDeleteஅவசியம் படிக்கிறேன் மது. எங்கே காணோம்?
ReplyDeleteஉங்களின் பெரிய பலமே விடாத வாசிப்புத்தான். இன்றைக்கு இல்லாவிட்டாலும் அது நாளைக்கு உங்களை எழுத வைத்துவிடும்-20 வருஷங்களுக்குப் பின் என்னை எழுதவைத்தது போல.
ReplyDeleteகங்கை நதியை சுத்தம் செய்யும் ஊழலை வெளிக் கொண்டுவந்த செய்தியைம் அதன் பின்னான நிகழ்வுகளும் மிக இயல்பாய் இருக்கும். எனக்கு கூவம் மணக்க, எழுபதுகளில் கொட்டப்பட்ட கோடிதான் நினைவிக்கு வந்தது.
ReplyDeleteமனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன்.
ReplyDelete