A Great Collection of all Tamil aggregators

Thursday, August 9, 2012

சினிமா பாரடைஸோ

என் மாதிரி சினிமா ஆர்வலனுக்கு மிகுந்த உவகை கொடுத்த இத்தாலியத் திரைப்படம். படம் முழுவதும் தியேட்டரில் நடக்கின்ற சம்பவங்களே. சிசிலி எனும் ஊரில் உள்ள சினிமா தியேட்டர் ஆபரேட்டருக்கும் சினிமா மீது மிகக் காதலாய் அலையும் ஒரு சிறுவனுக்குமான நட்பைச் சொல்லும் படம். கூடவே ஒரு காதலையும்,அதன் அலைக்கழிப்பையும். சிறுவன் பெரியவனாகி ஒரு பிரபலத் திரைபட இயக்குனரான் பின் அவனது ஆபரேட்டர் நண்பரின மரணச் செய்தியிலிருந்து படம் பின்னோக்கிச் செல்கிறது. படத்தின் முடிவில் அந்த தியேட்டர் இடிக்கப் படுகிறது பார்க்கிங் ஏரியாகவாக மாற்றப்படுவதற்காக. படம் உள்ளே புதைந்து கிடந்த பழைய ஞாபகங்களை மேலே புரட்டி போட்டது. மிகுந்த மெனவெழுச்சியுடன் இப்படத்தைப் பார்த்தேன். திரைப்பட ஆர்வலர்கள் அனைவருக்கும் பொதுவான மனவெழுச்சி இது. இயக்குனர் : குசாபே டொர்னாடோர்

Saturday, July 21, 2012

கலங்கிய நதி

தமிழிலும்,ஆங்கிலத்திலும் எழுதும் மிகச் சிலரில் பி.ஏ.கிருஷ்ணனுக்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கலாமெனத் தோன்றுகிறது அவரது கலங்கியநதியைப் படித்த பின். கதைச் சுருக்கம் எழுதுவது இந்த நாவலுக்குச் செய்யும் துரோகம் என்றாலும் ஒற்றை வரி. அஸ்ஸாமில் ஒரு தீவிரவாதக் கூட்டத்தால் சிறை பிடிக்கப் பட்ட இன்ஜினியர் ஒருவரை மீட்கச் செல்லும் அரசு அதிகாரியும்,அவரது அனுபவங்களும். ஆதவனையும்,இந்திரா பார்த்தசாரதியையும் சில இடங்களில் ஞாபகப் படுத்தினாலும் பல இடஙகளில் மீறுகிறார். இதழ் பிரிக்காமல் சிரிக்க வைக்கும் குறும்புகள் நிறைய இடங்களில் தட்டுப் படுகின்றன. இவரது பிற நூல்கள்: புலிநகக் கொன்றை. (The Tiger Claw Tree) அக்கிரகாரத்தில் பெரியார். திரும்பிச் சென்ற தருணம். கலங்கிய நதி. (The Muddy River). காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுளளது. ஒரு படைப்பாளனுக்கு கிடைக்கும் மிகப் பெரிய கெளரவம் அவனது படைப்பு நிறைய பேரைச் சென்று அடைவதுதான். கிருஷ்ணனும் நிறையப் பேரைச் சென்று அடைய வேண்டும்.

Sunday, March 11, 2012

புலிக்குட்டி



என் எழுத்துக்கு முன்னோடி பாஸ்கர்.
கரந்தை பாஸ்கர் என்ற பெயரில்
எழுதியவன். மிக நெருக்கம் என்பதால் ‘ன்’.
தற்போது ரிஷிவந்தியா என்ற பெயரில்
எழுதுகிறான்.
அவன் பையன் அரவிந்த் ஒரு குறும்படம்
எடுத்துள்ளார்.

பார்க்க :

mugam short film by B.Arvind Anuram

http://fantasticfriendsfilms.blogspot.in/2012/03/mugam-shortfilm-by-barvind-anuram.html

பார்த்து உற்சாகப் படுத்துங்களேன்.